ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கொரோனா பரவலின் அடுத்த கட்ட தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் தியேட்டர்களையும் இரவு நேர ஊரடங்கு சிக்கலில் தள்ளியுள்ளது. அதன் காரணமாக இரவுக் காட்சிகளை நடத்த முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தலைவி, எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களை தள்ளி வைத்துவிட்டார்கள். இதனிடையே, இரவுக் காட்சிகள் இல்லை, ஞாயிறு காட்சிகள் இல்லை என்பது தங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
தற்போது அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள். தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம்.