இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து | பிளாஷ்பேக்: இளையராஜா கங்கை அமரன் இணைந்த படம் | பிளாஷ்பேக் : பாலிவுட்டை கலக்கிய வாசன் | 25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்… | பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத் | பிளாஷ்பேக்: படச் சுருளை எரித்துவிடச் சொன்ன தணிக்கை அதிகாரி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை |
தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கொரோனா காலத்தில் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. தெலுங்கனா அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின்படி படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் படப்பிடிப்பில் பங்கேற்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்கள்.