கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கொரானோவின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் இரண்டாவது நாளிலிருந்து அந்த கட்டுப்பாட்டில்தான் திரையிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் படம் வியாபார ரீதியாக லாபத்தைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி 'எம்ஜிஆர் மகன்', மே 13ம் தேதி 'டாக்டர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விரைவில் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அந்தக் காட்டுப்பாடுகளில் தியேட்டர்களுக்கான கட்டுப்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். ஒருவேளை வார இறுதி நாட்களில் தியேட்டர்களை முழுமையாக மூட அரசு உத்தரவிட்டால் மேலே சொன்ன புதிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த தினங்களில் தியேட்டர்கள் இல்லையென்றால் புதிய படங்களை வெளியிட்டு வசூலைப் பெறுவது கடினம். கொரானோ பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை மேலும் சில படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.