பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

மலையாள நடிகர் பிரித்விராஜை போல, அவரது சகோதரரான இந்திரஜித்தும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவர் நடித்த நரகாசூரன் படம் ரிலீஸாக முடியாத சிக்கலில் இருக்கிறது. இதுதவிர குயீன் வெப் சீரிஸில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார். இந்தநிலையில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் 'மோகன்தாஸ்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இந்திரஜித்.
முரளி கார்த்திக் என்பவர் இயக்கி வரும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இந்திரஜித், தற்போது தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார். படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திரஜித் கூறும்போது, “விஷ்ணு விஷால் நிறுவனத்தின் அருமையான விருந்தோம்பல்.. விஷ்ணு ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி.. விரைவில் படத்தை திரையில் எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.
விஷ்ணு விஷாலும் இந்திரஜித் குறித்து கூறும்போது, “இந்திரஜித்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. என்ன ஒரு திறமையான நடிகர் மற்றும் மரியாதையான மனிதர்.. சக நடிகராக அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.