தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் |

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில், விஜய ராகவேந்திரா தயாரிக்க, அருண்விஜய், ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெபி பட்டேல் நடித்துள்ள படம் பார்டர். தமிழகம் முழுவதும் 11:11 புரொடக்சன் சார்பில் டாக்டர்.பிரபுதிலக் இப்படத்தை வெளியிடுகிறார். அறிவழகன் இயக்க, சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னை தி பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.
விழாவின் தொடக்கமாக இந்த ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான பார்டர் வெளியிடப்பட்டது. தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.
![]() |