தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்துள்ள படம் கர்ணன். படத்திற்கு ஒரு பக்கம் பாராட்டுகள் கிடைத்துள்ளன. அதேசமயம் படத்தில் சாதிய ரீதியான விஷயங்கள் மறைமுகமாக பேசப்பட்டிருப்பது சமூகவலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படத்தின் வசூல் 50 சதவீதம் தியேட்டர்கள் இருக்கைகளிலும் திருப்திகரமாகவே உள்ளதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நேரத்தில் பைரசி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வரும் இந்த நேரத்தில், தியேட்டருக்கு வருவதை தவிர்த்து பைரசி தளங்களில் படத்தை பார்த்து விட்டால் கர்ணன் படத்தின் வசூல் குறைந்து விடுமே என்று படக்குழு கலக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக விஜய்யின் மாஸ்டர் படத்தைப் போலவே சீக்கிரமே கர்ணன் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.