பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
முன்னணி நடிகரான பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்க நீ, நான் என பட நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தனக்கென பவன் கல்யாண் கிரியேடிவ் ஒர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இரண்டு படங்களையும் தயாரித்தார் பவன் கல்யாண். திறமையுள்ளவர்களை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த நிறுவனத்தை துவங்கிய அவர், 2018-க்கு பிறகு படத்தயாரிப்பில் இறங்கவில்லை.
இந்தநிலையில் தற்போது பீப்பிள் மீடியா பேக்டரி என்கிற நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளார் பவன் கல்யாண். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இளைஞர்களின் மனதில் உதிக்கும் உண்மையான படைப்புகளை சினிமாவில் கொண்டுவருவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.