தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
அங்காடித்தெரு அஞ்சலி கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. அதையடுத்து தற்போது பிங்க் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சலி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் எனது வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் திருப்தி அடைகிறேன். திரைப்படங்களின் எண்ணிக்கையை விட வேலையின் தரத்தை நான் நாடுகிறேன். அதனால் நான் படவாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்களின் பின்னால் ஓடவில்லை. எனக்கேற்ற நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வரும் என்று வெயிட் பண்ணுகிறேன்.
மேலும், பிங்க் ஹிந்தி அப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்கவில்லை. ஆனால் பிங்க் படத்தை பார்த்திருக்கிறேன். படம் எனக்கு பிடித்தி ருந்தது. தெலுங்கு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன என்று கூறும் அஞ்சலி, மகேஷ்பாபு, பவன் கல்யாண் போன்ற பெரிய நடிகர்களுடன் பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் ஒரு மெகா படத்தில் ஒப்பந்த மாகப்போகிறேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் அஞ்சலி.