'ஓஜி' தயாரிப்பாளர் மீது அவமதிப்பு வழக்கு தொடர போகிறேன் ; வழக்கறிஞர் ஆவேசம் | கரூர் மாநாடு சம்பவத்தை நான் விமர்சிக்கவில்லை ; 'டிராகன்' நாயகி விளக்கம் | ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
தமிழ்த் திரையுலகம் கடந்த ஒரு வருட காலமாக கொரானோ தொற்று பாதிப்பால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் சரியான வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து ஓடிடி தளத்திற்காக 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா தொழிலளார்களுக்கு உதவி செய்ய அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலளார்களுக்கு இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மாதத்திற்கு 1500 ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் சுமார் அந்த சங்கத்தைச் சேர்ந்த 700 உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
அவர்களின் உதவிக்கு சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் நன்றி தெரிவித்துள்ளார்.