இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. தற்போது ஆந்திர அரசியலில் பிஸியாக உள்ளார். அதோடு தமிழில் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஜாவிற்கு இரண்டு ஆபரேஷன்கள் நடந்துள்ளன. இதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்னையில் இந்த ஆபரேஷன் நடத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி ரோஜாவின் கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ‛‛ரோஜாவிற்கு கடந்தாண்டே இந்த ஆபரேஷன் நடக்க வேண்டியது. ஆனால் அவர் அரசியலில் பிஸியாக இருந்ததாலும், கொரோனா பிரச்னையாலும் தாமதமானது. இப்போது நல்லபடியாக இரண்டு ஆபரேஷன்கள் நடந்து முடிந்துள்ளன. கடவுள் அருளால் தற்போது அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு வார காலங்கள் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. தொடர்ந்து அவரது உடல்நிலைப்பற்றி அவ்வப்போது ரசிகர்களுக்கு சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.