ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
திருமணம் அளவுக்கு செல்வார்களோ என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிரிந்த 'நண்பர்கள்' பட்டியலில் த்ரிஷா-ராணா ஜோடிக்கு முக்கிய இடம் உண்டு.. இவர்கள் திருமணத்தில் இணைவார்களா என்கிற பேச்சு எழுந்தபோது, ராணா குடும்பத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பு காரணமாக ராணா - திரிஷா ஜோடி பிரிந்ததாக சொல்லப்பட்டது. அதன்பிறகு இவர்கள் இருவரும் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் இணைந்து பங்கேற்கவில்லை. ராணாவுக்கும் மீஹிகா என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் முடிந்துவிட்டது.
இந்தநிலையில் ராணா நடித்துள்ள காடன் படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனையொட்டி தனது நட்பு வட்டாரத்தில் உள்ள பிரபலங்களுக்கு பீட்சா, கேக் அடங்கிய சிறப்பு பரிசு பெட்டி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் ராணா. அந்தவகையில் த்ரிஷாவுக்கும் ஒரு பார்சல் அனுப்பியிருந்தார். அதை பெற்றுக் கொண்ட த்ரிஷா, அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதுடன், ராணாவுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் காடன் படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.