பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் கடந்த நான்கு மாதங்களில் வெளியான 50க்கும் மேற்பட்ட படங்களில் ஓடிய ஒரே படம் 'மாஸ்டர்'. அப்படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் பழையபடி திரண்டு வந்தனர்.
அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த பல படங்கள் சில நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. மக்கள் இன்னமும் தியேட்டர்கள் பக்கம் வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரானோ தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதனால், மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் 'காட்சிங்ல்லா Vs காங்' படத்திற்கு ஓரளவிற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த பெரிய படமாக அடுத்த வாரம் கார்த்தி, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'சுல்தான்' படம் வெளிவர உள்ளது. படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப் போகிறோம் என ஏற்கெனவே அதன் தயாரிப்பாளர் அறிவித்துவிட்டார்.
இந்தப் படத்தை தியேட்டர்காரர்களும் அதிகமாக நம்பியுள்ளனர். திரையுலகில் விசாரித்த போது படமும் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படம் ஒரு மாற்றத்தைக் கொடுத்ததைப் போல 'சுல்தான்' படமும் கொடுக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.