ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து தேசிய விருது பெற்றுள்ளார் டி.இமான். மீண்டும் அதே சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார் இமான். இந்த நிலையில், தேசிய விருது பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் டி.இமான் கூறுகையில், இந்தமுறைதான் முதன்முதலாக தேசிய விருது அறிவிப்பை நான் லைவ்வாக பார்த்தேன். அப்போது என் பெயரை அறிவித்தபோது என்னையுமறியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தேன். விருது அறிவிக்கப்பட்ட பிறகு ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலர் வாழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும் இந்த அறிவிப்பு வெளியான பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் நான் இசையமைத்த பாடலுக்கு ரஜினி சார் நடனமாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். முன்னதாக, அந்த பாடலுக்கு தான் நடனமாடுவதற்கு முன்பு எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை மைக்கில் அறிவித்திருக்கிறார் ரஜினி சார். அதைக்கேட்டு அனைவரையும் கைதட்டி பாராட்டியிருக்கிறார்கள். நான் சற்று தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். நான் சென்றபோது ஸ்பெசலாக கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்று தெரிவித்துள்ள டி.இமான், ரஜினியின் படையப்பா படத்தின் சிங்கநடை போட்டு என்ற ஓப்பனிங் பாடலை தியேட்டரில் பார்த்து ரசித்தவன் நான். இப்போது நானே ரஜினிக்கு அண்ணாத்த படத்தில் ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அப்படி நான் ரஜினிக்காக கம்போஸ் செய்த பாடலை மறைந்த எஸ்.பி.பி. அவர்கள் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் திரையில் வர இருப்பதை நினைக்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் டி.இமான்.