வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
கடந்தாண்டு ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது தான் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் பாதியில் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினர். அதையடுத்து கிரீன்மேட் வைத்து கிராபிக்ஸ் மூலமாக மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்கினார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இந்நிலையில் கோப்ரா படத்தின் விக்ரமின் ரோல் குறித்து அஜய் ஞானமுத்து கூறுகையில், கடுமையான விஷத்தன்மை கொண்ட கோப்ரா இன பாம்பு எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவதைப் போன்று இந்த படத்தில் எதிர்பாராமல் செயல்படும் பல கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். கோப்ரா படத்தில் விக்ரம் நடித்துள்ள முக்கிய காட்சிகள் ரஷ்யாவின் தலைநகரான பீட்டர் ஸ்பர்க்கில் 13 நாட்கள் நடைபெற்றது. ரஷ்ய அதிபர் புதினின் மாளிகையில் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட பணிகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்க உள்ளது. ஜூலை மாதத்தில் கோப்ரா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளோம் என்கிறார் அஜய் ஞானமுத்து.