அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யை வைத்து தளபதி 65 படத்தை முதலில் இவர்தான் இயக்குவதாக இருந்தது. படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென படத்திலிருந்து விலகினார் முருகதாஸ். இதையடுத்து அப்படத்தை நெல்சன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய்க்காக முருகதாஸ் உருவாக்கிய கதையில் விஷால் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலானது. கூடவே இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவல் உண்மையில்லை என விஷால் மறுத்துள்ளார். இதனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து து.ப. சரவணன் இயக்கும் படத்திலும், இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதுதவிர துப்பறிவாளன் 2 படத்தையும் அவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.