குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்டர்'. இப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் வரலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், மார்ச் 26ம் தேதிகளில் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது குறைவாகவே இருக்கும். அதோடு, அடுத்தடுத்து 'சுல்தான், கர்ணன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளதால் அந்தப் படங்களுக்காக தியேட்டர்களை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
எனவே, மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வந்தால் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என யோசித்துள்ளார்களாம். ஆனால், அப்போது பிளஸ் டூ மாணவர்களுக்குத் தேர்வுகள் நடக்கும் நேரம். அனைத்தையும் கருத்தில் கொண்டு விரைவில் புதிய தேதியை அறிவிக்கலாம் என்கிறார்கள்.