பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

நடிகை டாப்ஸி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.300 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள நிதி பரிவர்த்தனை குறித்து அந்த நிறுவன அதிகாரிகளால் உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அந்த நிறுவனத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேலும் ரூ.350 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபல நடிகையின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி ரொக்கமாகப் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ரூ.20 கோடி அளவுக்கு செலவு செய்ததற்கான போலியான கணக்கு காட்டப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவர்களின 7 வங்கி லாக்கர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தயாரிப்பு நிறுவனம் என்பது அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனம் ஆகும். பிரபல நடிகை என்று குறிப்பிடப்பட்டிருப்பது நடிகை டாப்ஸியை குறிப்பதாகும்.