துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் பல படங்களில் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் ஒன்று. வெங்கடேஷ் கிருஷ்ண யோகந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, கனிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அந்தவகையில் இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களில் இது தான் அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் சைரா நரசிம்ம ரெட்டி, மாஸ்டர், உப்பெனா படங்களுக்கு பிறகு தெலுங்கிலும் விஜய் சேதுபதியின் மார்க்கெட் எகிறி நிற்பதால் கோடை விடுமுறையில் வெளியாகும் இப்படத்தை அதேநாளில் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.