துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பிரபல இயக்குனரான செல்வராகவன் முதன் முறையாக நாயகனாக அறிமுகமாகும் படம் சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று ஏற்கனவே வெளியான நிலையில், இன்றைய தினம் செல்வராகவனின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அப்படக்குழு இன்னொரு போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் சிகரெட் புகைத்தபடி ஒரு கையில் துப்பாக்கி வைத்தபடி அமர்ந்திருக்கும் செல்வராகவனின் அருகே ரத்தக்கரை படிந்த கால்கள் இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதோடு, உங்களை ஒரு சிறந்த இயக்குனராக அறிந்ததில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது ஒரு சிறந்த நடிகருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.