ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமா வரை தனது ஆளுமையை செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அந்தவகையில் அவரது கைவசம் ஒரு டஜன் படங்கள் வரை உள்ளன. மேலும், இந்த 2021ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் விஜய்யுடன் நடித்த மாஸ்டர் மற்றும் குட்டிஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம், உப்பெனா தெலுங்கு படம் ஆகிய இதுவரை வெளியாகியுள்ளன.
இதையடுத்து இந்த ஆண்டு கோடை விடுமுறையில் அவர் நடித்துள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி விட்டன. அதேபோல் தமிழில் அவர் நடித்து வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படம் ஓ மஞ்சி ரோஜூ செப்தா என்ற பெயரில் தெலுங்கில் டப்பாகி வெளியாகிறது. அதையடுத்து சூப்பர் டீலக்ஸ் படமும் தெலுங்கில் டப்பாக உள்ளது.