பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் படமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இது சரித்திர படம் என்பதால் சரித்திரகால ஆடைகளை தேர்வு செய்வதும், தயார் செய்வதும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏக் லக்கானி தலைமையில் சுமார் 20 இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஐதராபாத் பிலிம்சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து 45 நாட்கள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தது. இது இரண்டாவது கட்ட படிப்பிடிப்பு. 3வது கட்ட படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் இயக்குனர் மணிரத்னத்துடக் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அதனை ஏக் லக்கானி தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு எழுதியிருப்பதாவது: பணியாற்றும் அணிகளில் ஒரு அணி, இதோ பெரிய தலைவர் மணி அவர்களுடனேயே புகைப்படம். இந்த அசுரத்தனமான படப்பிடிப்பை முழு மனதுடன் முடிக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் இதை முடித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. இனி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். என்று எழுதியிருக்கிறார்.