அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிவிட்டது. கடந்த மாதம் தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் வரலட்சுமி இணைந்து நடித்திருந்த 'க்ராக்' என்கிற படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இந்தநிலையில் கடந்த வாரம் தெலுங்கில் அவர் நடித்த மற்றொரு படமான 'நாந்தி' வெளியானது. அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தெலுங்கில் தான் நடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.