இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! |
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் படத்தில் அறிமுகமானவர் விஷ்வா. அதில் அவர் கால்பந்து வீரராக நடித்திருந்தார். தற்போது தலைப்பிடப்படாத ஒரு படத்தில் மீம் கலைஞராக நடிக்கிறார். இதனை கே.எச்.பிக்சர்ஸ் சார்பில் கோமளா, ஹரி பாஸ்கரன் தயாரிக்கிறார்கள். பாரதி பாலா இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இதுகுறித்து விஷ்வா கூறியதாவது: சாம்பியன் படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும். நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது 'மீம்' கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். என்றார்.