இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ்படங்களின் போட்டி பிரிவில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்பட 13 படங்கள் போட்டியிடுகின்றன. இந்த படங்களில் அதிகம் அறியப்படாத படங்களும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தி மஸ்கிட்டோ பிலாசபி (கொசுவின் தத்துவம்).
இது ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் 6 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். வசனமும் இன்றி, ரீடேக்கும் இன்றி எடுக்கப்பட்டுள்ளதாம். பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது . எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட படம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.