கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தொகுப்பாளினியாக இருந்த ரம்யா சுப்பிரமணியம் இப்போது நடிகை. திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்த ரம்யா, விவாகரத்துக்கு பிறகு தீவிரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். மொழி படத்தில் தொடங்கிய அவரது பயணம் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை, மாஸ்டர் என வளர்ந்தது.
இப்போது முதன் முறையாக சங்கத்தலைவன் என்ற படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். இது தறியுடன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவனாக சமுத்திரகனியும், அவரது மனைவியாக ரம்யாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், மாரிமுத்து, சுனுலட்சுமி, பாலாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார், ஸ்ரீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் நெசவாளர்களின் வாழ்வியில் கதை. தங்களின் வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் போராட்டத்திலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்கும் ஒரு புரட்சிக்காரனின் கதை. இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. நாவலில் சொல்லப்பட்ட இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்பட்டு உண்மைக்கு மிக நெருக்கமாக படம் உருவாகி உள்ளது. என்கிறார்.