லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் |
மலையாளத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். தமிழ், தெலுங்க, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது. மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் கூட தற்போது த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் தயாராகி வரும் பிப்-19ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படஹ்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம் படம் ஹாலிவுட்டில் ரீமேக்காக இருக்கும் தகவலை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி ஜீத்து ஜோசப் கூறும்போது, ஹாலிவுட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் மூலமாக இந்தப்படத்தை ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார். ஒரிஜினல் கதையில் கதாநாயகனை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்தை, ஹாலிவுட்டுக்காக கதாநாயகியை மையப்படுத்தி திரைக்கதையை மாற்றி ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியுள்ளாராம் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஹிலாரி ஸ்வாங்க் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த ஸ்க்ரிப்ட் இறுதி செய்யப்படும் பட்சத்தில் ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இந்தப்படத்தை இயக்குவார் என்றும் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்..