துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சினிமா கம்பெனி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு சில தமிழ் படங்களிலும் நடித்தாலும், குறிப்பிட்டு சொல்லும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கன்னடம், மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
தற்போது வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிலா, அமெரிக்க மாப்பிள்ளை என்ற வெப் சீரிஸ்களில் நடித்த ஸ்ருதி, தற்போது வதம் என்ற தொடரில் நடித்துள்ளார். இது இந்தியில் வெளியான மருதாணி, காசி தொடர்கள் டைப்பிலான பெண் போலீஸ் அதிகாரியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ஆக்ஷன் சீரிஸ். வருகிற 12ந் தேதி வெளிவருகிறது.
இதில் சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரியாக ஸ்ருதி நடிக்கிறார். பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து, பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கின்றார். கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது.
ஒரு பெண்ணாக அவரது துறையிலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் பெரும் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கின்றார். ஆனால் அவரது துணிவும், நேர்மையும் நீதிக்கான போரட்டமும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறது. என்பது தான் தொடரின் கதை. 10 பகுதிகள் கொண்ட இந்த தொடரினை வெங்கடேஷ் பாபு இயக்கியுள்ளார்.
இதுகுறித்து ஷ்ருதி ஹரிஹரன் கூறியிருப்பதாவது: ஒரு நடிகையாக எப்பொழுதும் எனக்கு சவாலான கதாபாத்திரங்களையே தேர்வு செய்வேன். தனிபட்ட முறையில் எனக்கு சக்தி பாண்டியன் கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. பயமில்லாமல் சரியானவைக்காக போராடும் கதாபாத்திரம் மற்றும் ஒரு தொழிலதிபரின் கொலையை தீர்க்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் கதாபாத்திரம்.
நடிக்கும் போது, இந்த கதாபாத்திரம் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளையும் உள்ளடக்கி இருந்தது. படபிடிப்பில் மிகவும் உற்சாகமாகவும், அதே நேரத்தில் மிகவும் கடினமாகவும் இருந்தது. எங்களுடைய கடின உழைப்பிலும், அர்பணிப்பிலும் உருவாகியுள்ள வதம் தொடர் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பையும், மிகுந்த மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன். என்கிறார் ஸ்ருதி.