பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் நடிகர் என்ற அடையாளத்திலிருந்து மெல்ல மெல்ல இந்திய நடிகர் என்ற அடையாளத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி என போய்க் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே, ஹிந்தியில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதி அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டின் இளம் நாயகனான ஷாகித் கபூர் உடன் அந்த சீரிஸில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளாராம். 'த பேமிலி மேன்' வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த சீரிஸையும் இயக்க உள்ளார்களாம்.
இதற்காக ஷாகித் கபூர் 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். ஆனால், அவருடைய ஒப்பந்தத்தில் இந்த சீசன் நன்றாகப் போய் அடுத்த சீசன் ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் சம்பளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அதே சமயம் விஜய் சேதுபதிக்கு 55 கோடி சம்பளமாம். ஆனால், அடுத்த சீசனில் கூடுதல் சம்பளம் என அவருடைய ஒப்பந்தத்தில் இல்லையாம்.
தமிழ்ப் படங்களில் நடிக்கக் கூட விஜய் சேதுபதிக்கு அவ்வளவு சம்பளம் கிடையாது. அப்படியிருக்க வெப் சீரிஸில் நடிக்க அவ்வளவு பெரிய தொகையா என ஆச்சரியப்படுகிறதாம் பாலிவுட் வட்டாராம். இருவரது சம்பளமே 100 கோடிக்கு வந்துவிட்டால் மற்ற செலவுகளைச் சேர்த்தால் ஒரு வெப் சீரிஸுக்கே இவ்வளவு செலவா என அதிர்ச்சியடைகிறார்களாம்.