கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! |

அனுஷ்கா நடித்த நிசப்தம் படம், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமேசான் பிரைமில் வெளியான நிலையில் அடுத்து அவரைத்தேடி சகுந்தலம் உள்பட சில பட வாய்ப்புகள் சென்றன. ஆனால் அவற்றை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. ரமேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படம் குடும்பப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இந்த படத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்கிறார். தற்போது 39 வயதாகும் அனுஷ்கா, கிட்டத்தட்ட அதே வயது கொண்ட ஒரு பெண் நிஜ வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய கதையில்தான் நடிக்கிறாராம். இப்படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது.