ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா |

சமந்தா நடித்து வந்த முதல் வெப்சீரிஸ் தி பேமிலிமேன் -2. இந்த தொடர் பிப்ரவரி 12-ந் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருந்தது. ஆனால் மிர்சாபூர், தந்தவ் போன்ற வெப் தொடர்கள் மத உணர்வுகள் மற்றும் பிராந்திய உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தி பேமிலி மேன்- 2 வெப் தொடரை மறுஆய்வு செய்கிறார்கள்.
அதோடு, அமேசான் பிரைமும் வெப்சீரிஸ் தயாரிப்பாளர்களிடம், எந்தவித சர்ச்சைகளும் இல்லாத கதைகளை படமாக்குமாறும் எச்சரித்துள்ளதாம். அதன்காரணமாகவே சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வந்த தி பேமிலிமேன்- 2 வெப்தொடரில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் காட்சிகள ஏதேனும் உள்ளதா?என மீண்டும் ஆய்வு செய்து அதன்பிறகு ஒளிபரப்ப போகிறார்களாம்.
இதனால் பிப்ரவரி12ல் சமந்தாவின் முதல் வெப்சீரிஸ் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.




