''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் இந்த மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியான இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
படம் இன்று ஓடிடியில் வெளியானாலும் தியேட்டர்களில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. படம் வெளிவந்து மூன்றாவது வாரத்தைத் தொட்ட பின்னும் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை புரிவது தியேட்டர்காரர்களுக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளதாம். அதனால்தான், படத்தை ஓடிடியில் வெளியிடுவதை அவர்கள் எதிர்த்ததாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
நாளை விடுமுறை தினம் என்பதால் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சில காட்சிகளுக்கு 90 சதவீத டிக்கெட்டுகள் கூட விற்றுத் தீர்ந்துள்ளன. விஜய் நடித்த படம் ஒன்று இவ்வளவு விரைவாக ஓடிடி தளத்தில் வெளிவருவது இதுவே முதல் முறை. இப்படத்தை ஓடிடி தளத்தில் அடுத்த சில நாட்களில் அதிகம் பேர் பார்க்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
அடுத்த வாரம் திங்கள் கிழமைக்குப் பிறகு 'மாஸ்டர்' பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்படலாம்.