துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரை வைத்து வெற்றிப்படங்களை இயக்கியவர். இதுவரையில் 47 படங்களை இயக்கியுள்ளாராம். அதில் ஒரு சில படங்கள்தான் தோல்விப் படங்கள், மற்ற எல்லாமே வசூலை வாரிக்குவித்த படங்கள்.
2000ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் சொந்தமாக ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து கமல்ஹாசன் நாயகனாக நடிக்க 'தெனாலி' படத்தைத் தயாரித்தார். சுமார் 21 வருடங்கள் கழித்து மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது நிறுவனம் சார்பில் இரண்டாவதாகத் தயாரிக்கும் 'கூகுள் குட்டப்பன்' படத்தை நேற்று ஆரம்பித்தார்.
இப்படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படம் மலையாளத்தில் வெளிவந்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் கதாநாயகி கதாபாத்திரம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவராக இடம் பெற்றிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை தமிழில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக மாற்றியுள்ளார்களாம்.
தன்னுடைய முதல் தயாரிப்புப் படமான 'தெனாலி' படத்தில் கமல்ஹாசன் இலங்கைத் தமிழராக நடித்திருப்பார். அந்த சென்டிமென்ட்டில் இந்தப் படத்தில் கதாநாயகியை இலங்கைத் தமிழ்ப் பெண் கதாபாத்திரமாக மாற்றிவிட்டோம் என அதற்கான காரணத்தைக் கூறுகிறார் ரவிக்குமார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் மண் மணம் மாறாத இலங்கைத் தமிழை அழகாகப் பேசி பலரின் மனதைக் கவர்ந்தவர் லாஸ்லியா. எனவே, அக்கதாபாத்திரத்தில் நடிக்க அவரைத் தேர்வு செய்தேன் என்கிறார்.
இலங்கைத் தமிழ் சென்டிமென்ட் இரண்டாவது முறையாக ரவிக்குமாருக்கு வெற்றிகரமாக அமையுமா என்பது படம் வந்தபின் தெரியும்.