ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி | தனுஷ், சூர்யாவிற்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | ஹேமா கமிஷன் அறிக்கை : கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | ஆஸ்தான மலையாள எழுத்தாளரின் மறைவுக்கு ராஜமவுலி இரங்கல் | வீர தீர சூரனில் எங்களுக்கு விக்ரம் தான் மேக்கப் மேன் : சுராஜ் வெஞ்சாரமூடு கலாட்டா | சபரிமலை தரிசனம் செய்த மோகன்லால் ; மம்முட்டி பெயரில் அர்ச்சனை | ப்ரோ டாடிக்காக முதலில் அணுகியது மம்முட்டியை தான் : பிரித்விராஜ் புது தகவல் |
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் 'சர்வர் சுந்தரம்'. இப்படம் முடிவடைந்து கடந்த 2017ம் வருடம் செப்டம்பர் மாதேமே வெளியாக வேண்டியது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கு முன்பு சில முறை படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து அதன்பின் படம் வெளிவராமல் நின்று போனது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கடைசியாக அறிவித்தார்கள். அப்போது சந்தானம் நாயகனாக நடித்த மற்றொரு படமான 'டகால்டி' படத்தை வெளியிட வைத்து இந்தப் படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
பின்னர், கொரானோ தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் வெளியாகவில்லை. தற்போது அடுத்த மாதம் படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த முறையாவது தள்ளிப் போகாமல் வெளியாகி ரசிகர்களுக்கு இந்த 'சர்வர் சுந்தரம்' பரிமாற வரட்டும்.