மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
சூரரைப்போற்று படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கும் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்து வரும் சூர்யா, அதைத் தொடர்ந்து பாண்டிராஜ், வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
சூர்யாவின் 40வது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சத்யராஜும் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.