புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்கிற கருத்து நிலவியது. இந்த நேரத்தில் படங்களை இனி கூட்டுத் தயாரிப்பாக தயாரித்து லாபத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்கான பாரீட்சாத்த முயற்சியாக கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ஒரு படத்தை தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்தப் படத்தின் முதலீடு 2 கோடி ரூபாய். இந்த 2 கோடி ரூபாயுமே 200 ஷேர்களாகப் பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது : சுமார் 8 மாதங்களுக்கு முன்பு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சத்யராஜ் சார் நடிக்க ஒரு படம் குறித்துப் பேசியிருந்தோம். அது தொடர்பான வியாபாரத்தில் பங்குகள் விற்பனை குறித்தும் அறிவித்திருந்தோம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் என்பது ரொம்ப நீண்டுவிட்டதால் படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை.
இதற்கு இடையில் ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கித்தான் அந்தப் படத்தைப் பண்ணலாம் எனத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதே படத்தின் சாயலில் தான் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வந்தது. அதனால் வேறொரு கதையைச் செய்தோம். அது சரியாகப் பொருந்தி வரவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் நீண்ட மாதங்கள் நீண்டுவிட்டதால், அனைத்துமே குழப்பமாகிவிட்டன. ஆகையால், இப்போதைக்கு சத்யராஜ் படத்தை டிராப் செய்துவிட்டோம். என்னோடு சேர்ந்து பயணிக்கலாம் என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த படம் தொடர்பாக யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. படம் தொடங்கும்போது அனைவரிடமும் சொல்லித்தான் தொடங்கினோம். ஆகையால், கைவிட்டதையும் சொல்ல வேண்டுமே என்று சொல்கிறேன்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.