ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சென்னை 28 படம் தான் தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையப்படுத்திய முதல் படம். அதன்பிறகு ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 28 2ம் பாகம் உள்பட பல படங்கள் வந்திருக்கிறது. இப்போது திடல் என்ற பெயரில் மீண்டும் ஒரு கிரிக்கெட் படம் உருவாகி உள்ளது.
கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, நடித்திருக்கிறார் பி.பிரபாகரன். அவருடன் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ், கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் வினோதினி, ராட்சசன் கிறிஸ்டோபர், சரண் ரவிசந்திரன், நடித்துள்ளார்கள் .இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு. இசை ஸ்ரீசாய் தேவ். திரைக்கதை, எழுதி, இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை .முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஊரில் உள்ள சிலர் அவர்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கப்படுத்துகிறார்கள். அவர்கள் பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட. அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் தங்களுக்கான ஒரு விளையாட்டு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அது நடந்தா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.