குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி |
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி நாற்காலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்..,
நாற்காலி படமானது அமைதிபடை படம் போல அரசியல் நய்யாண்டியுடன் கூடிய படம். இந்த படத்தில் நான் எம்.ஜி.ஆரின்.ரசிகனாக நடித்துள்ளேன். இந்த படம் முழுக்க அரசியல் நையாண்டியுடன் கூடிய படம். ஆனால் யாரையும் காயபடுத்தாத அளவிற்கு இருக்கும். எம்.ஜி.ஆரின் பெருமைகள் தொடர்பான படம் என்பதால் முதல்வர் இந்த பாடலை வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் நினைத்தார்.
எம்.ஜி.ஆர். என்பவர் அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும். சட்டமன்ற தேர்தலுக்காக இந்த படம் எடுக்கபடவில்லை . அமைதி படைக்கு பிறகு அரசியல் நய்யாண்டியுடன் கூடிய திரைபடம் வரவில்லை.
தமிழக அரசியலிலும்,சினிமாவிலும் எம்.ஜி.ஆரை தவிர்த்து பேச முடியாது. அதனால் தான் இன்றைய நிலையிலும், அவர் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. அரசியல் என்றாலே அது எம்.ஜி.ஆர் தான் எனத் தெரிவித்தார்.