'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வெப் சீரிஸ் பௌரஸ்பூர். இதில் அன்னு கபூர், சிஷ்பா ஷிட்னி, மிலிந்த் சோமன், ஷாகிர் ஷேக் உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சிந்திர வாட்ஸ் என்பவர் இயக்கி உள்ளார், ராகுல் தேவ் நாத் என்பவர் இசை அமைத்துள்ளார். 7 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் கடந்த டிசம்பர் மாதம் 29ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
ஆணாதிக்கம் நிறைந்த பௌரஸ்பூர் சாம்ராஜ்யத்தில் பாலின சமத்துவத்துக்காக போராடும் பெண்களின் கதை. இது ஒரு சரித்திர கதை. இந்த தொடரில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பதாக இசை அமைப்பாளர் ஜிப்ரான் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த படத்தின் பின்னணி ஆடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். பௌரஸ்பூர் தொடரில் உத்தம வில்லன் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறி உள்ளார். வெப் சீரிசின் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறார்.