ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளரான ஜிப்ரான் 'லைப் இருக்கு டிரக்ஸ் எதற்கு' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். வைசாக் இதன் பாடலை எழுதி உள்ளார். இந்த ஆல்பம் முதன் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுளளது. இதனை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : போதைப்பொருள் பழக்கத்தினால் விளையும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, 'லைப் இருக்கு டிரக்ஸ் எதற்கு' என்ற பாடலை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இசை முயற்சியை வைசாக் எழுதி, பாடியுள்ளார் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் இந்தப் பாடல் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தப் பாடல் மூலம் உரையாடல்களைத் தொடங்குவதும், இதன் நோக்கத்தை செயல்படுத்த வைப்பதும், இறுதியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதே எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.