லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'லவ்டுடே' படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக தனி அலுவலகம் போடப்பட்டு தயாரிப்புப் பணிகளும் ஆரம்பமானது. கடந்த மாதம் நடைபெற்ற கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கூட விக்னேஷ் சிவன் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பிலிருந்து கமல்ஹாசன் விலகிவிட்டார். அப்படத்தை 'லியோ' படத் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். இதற்கான பூஜையும் நடைபெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே தயாரிப்பாளர் மாறக் காரணம் என்கிறார்கள். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்திற்காக நயன்தாராவிடம் பேசி அவர் நடிக்க மறுத்ததாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது.
விக்னேஷ் சிவன், அனிருத், பிரதீப், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி என புதிய கூட்டணியில் உருவாக உள்ள இப்படம் மீது இப்போதே எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.