லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் வலிமை படத்தில் இணைந்து இருக்கிறார் அஜித் குமார். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சியயை ரஷ்யாவின் படமாக்கப் போவதாக சொல்லி வெயிட் பண்ணி கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்களும் வெளியாக தொடங்கிவிட்டன. அந்தப் படத்தை எச். வினோத் இயக்கப் போவதாகவும், அஜித்தின் விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க போவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அஜித் படங்களுக்கு தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில் அஜித் 61ஆவது படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வலிமை படம் வெளியானதும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.