தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். சின்னத்திரையில் இசை பயணத்தை தொடங்கி இன்று பெரிய திரையில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறவர். மெலடி பாடல்களுக்கென்று தனி முத்திரை பதித்து வருகிறவர். தற்போது இமான் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். டிஐ புரொடக்ஷன் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தேங்க் யூ ஜீஸஸ் எனும் ஆன்மிக ஆல்பத்தை தயாரித்துள்ளார். இது இயேசுவை பற்றிய ஆன்மிக ஆல்பம். 8 பாடல்கள் கொண்டிருக்கும் இந்த ஆல்பம் முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இசையமைப்பாளர் இமான் கூறியதாவது: இசையமைப்பாளராக எனது வெற்றிப்பயணம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலும், ஆதரவாலும் நிகழ்ந்தது. அவர்கள் தான் என் வெற்றியின் பெரும் தூண்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, தொடரும் எனும் நம்பிக்கையில் தான் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. விரைவில் திரை இசை அல்லாத, சுயாதீன ஆல்பங்களை தயாரிக்கவுள்ளோம். அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். என்றார்.
இந்த நிறுவனத்தின் சார்பில் தரமான சிறுபட்ஜெட் படங்களை தயாரிக்கும் முயற்சியல் இறங்க இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.