ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தமிழ், தெலுங்கு என பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. அவர்களது குடும்பத்தில் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா என பல வருடங்களாக பிரபலமாக உள்ளனர். அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சினிமா தயாரிப்பாளர்களாகவும் உள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் ஓரிரு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அது மட்டுமல்லாது நடிகர் சங்கத்திலும் கார்த்தி பொருளாளராக உள்ளார்.
கார்த்தி நடிகராக அறிமுகமான படம் 'பருத்தி வீரன்'. அந்தப் படத்தைத் தயாரித்தது கார்த்தியின் உறவினரான ஸ்டுடியோ க்ரீன் கேஈ ஞானவேல் ராஜா. உறவினராக இருந்தாலும் கார்த்தியை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு முன்பு 'நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன்' ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. 'அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி' ஆகியவை தோல்விப் படங்கள்.
சுமார் 10 வருட இடைவெளிக்குப் பிறகு அந்நிறுவனத்தில் கார்த்தி நடித்த படம் 'வா வாத்தியார்'. இப்படமும் இரண்டு வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக நேற்று டிசம்பர் 12 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுமார் 21 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே படத்திற்கான இடைக்காலத் தடை நீக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது. அதையடுத்து படத்தைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த 'நோட்டா, தேவராட்டம், மிஸ்டர் லோக்கல், மகாமுனி, காட்டேரி, பத்து தல, 80ஸ் பில்ட்அப், ரெபெல், தங்கலான், கங்குவா' ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தையோ, பெரிய லாபத்தையோ தரவில்லை. சில படங்கள் நிறைய நஷ்டத்தைத் தந்தன.
'தங்கலான், கங்குவா' ஆகிய படங்களின் போதும் கடன் தொகை காரணமாக அந்நிறுவனம் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்தது. அப்போது ஒரு கோடி ரூபாயை செலுத்தி எப்படியோ படத்தை வெளியிட்டுவிட்டனர். ஆனால், இந்த முறை நீதிமன்றம் மொத்த தொகையையும் செலுத்த வேண்டும் என்பதில் கறாராக இருந்தது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இப்படி சிக்கலில் இருந்தால், அந்த நடிகர்களே அவர்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்தோ அல்லது நிதியுதவி செய்தோ படத்தை வெளியிடுவார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக கார்த்தி எந்த விதத்திலும் உதவி செய்ய முன் வராதது தமிழ்த் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விழா, ஐதராபாத்தில் ஒரு விழா, சமூக வலைத்தளங்களில் நிறைய புரமோஷன், யு டியூப் பேட்டிகள் என பரபரப்பாகச் செய்தார்கள். தமிழ், தெலுங்கில் இப்படத்தின் வெளியீட்டிற்காகத் தியேட்டர்களும் தயாராக இருந்தது. இருந்தாலும் படம் வெளியாகாமல் போய் பலருக்கும் தடுமாற்றத்தைத் தந்தது.
தமிழ் சினிமா சென்டிமென்ட்படி ஒரு படம் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனால் அந்தப் படம் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.
தமிழ் சினிமாவின் பெருமை மிகு நடிகர், முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி இந்தப் படத்தில் நடித்துள்ளார். பலருக்குக் 'கை' கொடுத்து அவர்களது வாழ்க்கையை உயர்த்தியவர் எம்ஜிஆர். அவரது ரசிகராக நடித்த ஒரு படத்திற்கு அவரது பெருமையைக் காப்பாற்றுவதற்காக கார்த்தி 'கை' கொடுத்து 'வாத்தியார்'ஐ எந்த சிக்கலுமின்றி வரவழைத்திருக்கலாம்.




