பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் அடுத்த வளரும் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறார். அவர் இயக்குனராக அறிமுகமான 'கோமாளி' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து அவரே கதாநாயகனாக நடித்து இயக்கிய 'லவ் டுடே' படம் 100 கோடி வசூலைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது.
அதற்கடுத்து இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'டிராகன்' படம் 150 கோடி வசூலைப் பெற்று இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. அடுத்து தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'டியூட்' படம் நான்குநாளில் 83 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இன்றும் விடுமுறை என்பதால் இப்படம் 100 கோடியைக் கடந்துவிடும்.
நாயகனாக அறிமுகமாகி நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் பெறுவது தமிழ் சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு கதாநாயகனுக்கும் நடக்காத ஒன்று. அது பிரதீப் ரங்கநாதனுக்கு நடக்கப் போகிறது.
பிரதீப் நடித்து அடுத்து டிசம்பர் 18ம் தேதி 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் வெளியாக உள்ளது. அந்தப் படமும் 100 கோடி வசூலித்தால் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி வசூல் பெற்ற முதல் நாயகன் என்ற சாதனையும் புரிய வாய்ப்புள்ளது.