'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஷ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'மிராய்'.
இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக 27 கோடியே 20 லட்சம் வசூலாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
தேஜா சஜ்ஜா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ஹனுமன்' படம் முதல் நாளில் 23 கோடியே 50 லட்சம் வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது 'மிராய்' படம் முறியடித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹனுமான்' அளவிற்கு இந்தப் படம் 300 கோடி வசூலைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.