அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சென்னை சிட்டியில் பெரிய சினிமா நிகழ்ச்சிகளை பெரியமேடு பகுதியில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவது வாடிக்கையான விஷயம். முன்னணி படங்களின் இசை வெளியீட்டுவிழா அங்கேதான் நடக்கும். உள்விளையாட்டு அரங்கில் ஏ.சி வசதி உள்ளது. பார்க்கிங் பிரச்னை கிடையாது. 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம், கூட்ட நெரிசல், வாகன நெரிசல் ஏற்படாது என்பதால் நேரு ஸ்டேடியத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு சிலர் பக்கத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லுாரியில் நிகழ்ச்சி நடத்துவார்கள். வரும் செப்டம்பர் 13ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இளையராஜாவை வாழ்த்த உள்ளனர். இதனால் அந்த ஏரியா களை கட்ட உள்ளது.
மறுநாளே, செப்டம்பர் 14ல் நேரு ஸ்டேடியத்தில் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் பாடல்கள் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்கிறது. முதல்வர் பேரனும், துணை முதல்வர் மகனுமான இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் பொறுப்பேற்றபின் நடக்கும் முதல் நிகழ்வு என்பதால், இந்த நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடக்க உள்ளது.
இளையராஜா விழாவில் அரசு சார்பில் கலந்து கொள்ளும் துணை முதல்வர் உதயநிதி, மகன் இன்பன் நடத்தும் இட்லி கடை விழாவில் மறுநாளும் கலந்துகொள்வாரா என தெரியவில்லை. அதேசமயம், இளையராஜா விழாவுக்கு ரஜினி, கமல் வந்தாலும், விஜய், அஜித் வருவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.