ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது உறுதியாகிவிட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் கமல்ஹாசன். இன்னமும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வப்போது கமலிடம் மட்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசி வருவதாக தகவல்.
இந்நிலையில், ரஜினி, கமல் இணையும் படமும் தாதாயிசம் பேக்கிரவுண்டில் உருவாக உள்ளது. ரஜினி, கமல் இருவருமே தாதாக்கள். ஆனால், அவர்கள் ஒரு காலத்தில் நண்பர்கள். பின்னே ஏன் பிரிந்தார்கள். எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பது கதை என கோலிவுட்டில் ஒரு புதுக்கதை உலா வருகிறது.
ஆனால், படக்குழுவோ இது தவறு. இன்னும் இது போல நுாற்றுக்கணக்கான கதைகள் வரலாம். ரஜினி, கமல் இணையும் படம் என்பதால் யாரும் எதிர்பாராதவகையில் மிரட்டலாக இருக்கும். அதேசமயம், லோகேஷ் பாணியில் வன்முறை, ரத்தம், தாதாயிசம், கடத்தல் விஷயங்களும் இருக்க வாய்ப்பு என்கிறார்கள்.
இதற்கிடையில், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோரும் சினிமாத்துறையில் இருப்பதால், அந்த படத்தில் தங்களின் பங்கு இருக்க வேண்டும். ஏதாவது ஒருவகையில் அந்த படத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். படத்துக்கு இசை அனிருத் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.