தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் பிரபலமாகி உள்ளவர் தமிழ் நடிகரான தனுஷ். அவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி, இரண்டு மகன்கள் பிறந்த பிறகு, 20 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டனர்.
தனுஷைப் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு நடிகையுடன் காதல் கிசுகிசு வருவது வழக்கம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அந்த கிசுகிசு காணாமல் போகும். இப்போது மீண்டும் ஒரு காதல் கிசுகிசு எழுந்துள்ளது.
துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். அவர் நடித்த 'சன் ஆப் சர்தார் 2' ஹிந்திப் படம் கடந்த வாரம் வெளிவந்தது. அந்தப் படத்தின் பிரிமியர் காட்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். அதோடு ஆகஸ்ட் 1ம் தேதி மிருணாளின் பிறந்தநாள் பார்ட்டியிலும் பங்கேற்றுள்ளார். மேலும் தனுஷின் இட்லி பாடலுக்கு மிருணாள் வைப் செய்யும் வீடியோவும் வைரலாகிறது.
ஒரு நிகழ்வில் இருவரும் நெருங்கி வந்து பேசிய வீடியோ ஒன்று ஊடகங்களில் வெளியானது. இதையெல்லாம் வைத்து உடனே, தனுஷ் - மிருணாள் இருவரும் காதலிக்கிறார்களா என பாலிவுட் மீடியாக்கள் செய்தியை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.