மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின்னர், ‛ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஹன்சிகாவின் திருமண செய்தி வெளியானதுமே, சோஹேல் பற்றி இணையத்தில் பல செய்திகள் வெளி வந்தன. தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகா மோத்வானிவை திருமணம் செய்து கொள்கிறார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது. சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியானது.
இது பற்றி பேசி ஹன்சிகா, ‛‛தோழியின் கணவரை அபகரித்துக் கொண்டதாக செய்திகள் வெளியானதை பார்த்து நான் மிகவும் உடைந்து விட்டேன். அது உண்மை இல்லை, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள், அது தான் உண்மை'' என கண்ணீர்மல்க பேசி இருந்தார்.
திருமணத்திற்கு பிறகும் படத்தில் நடித்து வந்தார் ஹன்சிகா. இந்நிலையில், ஹன்சிகா, தனது காதல் கணவரை பிரிந்து அம்மாவுடன் வாழ்த்து வருவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அப்போதிருந்தே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இருவர் தரப்பிலும் இதுக்குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.