‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் |
நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்திற்கான கதாநாயகி தேடும் பணியில் உள்ளனர். முதற்கட்டமாக நடிகை சாய் பல்லவியை அணுகியுள்ளனர். அவர் ஹிந்தியில் உருவாகிவரும் ‛ராமாயணா' படத்திற்கு அதிகளவில் கால்ஷீட் தந்துள்ளதால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றார்.
இதையடுத்து இளம் நடிகை ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நடித்து வருவதால் அவருக்கு கால்ஷீட் பிரச்னை உள்ளதாக கூறி மறுத்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் தவறவிட்ட வாய்ப்பு தற்போது மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனிடம் சென்றுள்ளது. அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.